உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான எலுமிச்சை டயட்
அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும். அதிலும் இந்த புளிப்புச் சுவையுடைய பழம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள உதவும் என்பதும் தெரிந்த விஷயமே.
எனவே உடல் எடை மற்றும் அழகைப் பராமரிப்பதற்கு எலுமிச்சை ஜூஸை மட்டும் குடிக்காமல், உண்ணும் உணவிலும் எலுமிச்சையைப் பயன்படுத்து நல்ல பலனைத் தரும். எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது திட உணவுகளான அரிசி அல்லது கோதுமையால் செய்யப்படும் உணவுகளை சிறிது நாட்கள் அதிகம் சாப்பிடக் கூடாது.
இதே போன்று கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகள் உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும்.
காலை உணவு
எலுமிச்சை டயட்டை மேற்கொள்பவர்களுக்கு லெமன் பேன்கேக் ஒரு சிறந்த காலை உணவு. இதனால் வயிறு நிறைந்திருப்பதோடு நல்ல சுவையாகவும், உடல் எடையைக் குறைக்கக்கூடிய உணவாகவும் இருக்கும்.
எலுமிச்சை- தேன்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந்தால் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.
எலுமிச்சை ஜூஸ்
ஒரு நாளைக்கு அவ்வப்போது எலுமிச்சை ஜூஸை குடித்தால் உடல் வறட்சி நீங்கி, நச்சுக்கள் வெளியேறி, அடிக்கடி பசி ஏற்படுவதும் தடைப்படும். குறிப்பாக எடை குறைக்க நினைப்போர், ஜூஸில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
லெமன் பை(Lemon Pie)
டயட்டில் இருப்பவர்கள், நிச்சயம் க்ரீம் உள்ள உணவுப் பொருட்களை அறவே தொடக்கூடாது. குறிப்பாக செயற்கை இனிப்புக்களைப் பயன்படுத்தி செய்தவற்றை சாப்பிட்டால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலில் கொழுப்புக்களும் அதிகரிக்கும். எனவே இத்தகைய க்ரீம்களை சாப்பிடுவதற்கு பதிலாக லெமன் பை சாப்பிடுவது சிறந்தது.
எலுமிச்சை சூப்
எடையை குறைக்க நினைக்கும் போது அதிகப்படியான நீர்பானங்களை குடிக்க வேண்டியிருக்கும், அதற்காக எப்போதுமே ஜூஸ் குடிக்க முடியாது. ஆகவே அப்போது அதற்கு பதிலாக சூடான எலுமிச்சை சூப் சாப்பிட்டால், புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.

முதுமையை தடுக்கும் செம்பருத்தியின் மருத்துவ பலன்கள்!

செம்பருத்தி மிதவெப்ப மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் அழகிய பூச்செடி வகையைச் சேர்ந்ததாகும். பல்வேறு வகைகளில் வளரும் இந்த செடியில் தனித்தன்மை வாய்ந்த அழகிய பூக்கள் பூக்கும்.
செம்பருத்தி அபரிமிதமான மருத்துவ குணங்கள் உள்ள செடியாகும்.
செம்பருத்தி இலைகள் மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு வழிமுறைகளிலும் கையாளப்பட்டு வருகிறது.
செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் புகழ் பெற்று விளங்குகிறது.
ஆயுர்வேதத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை செம்பருத்தி உயர்ந்த மருத்துவ குணம் கொண்டவைகளாவும், இருமல், முடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்றவற்றிற்கு அருமருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
முடி உதிர்தலை தடுத்தல்
செம்பருத்தி இலைகள் மற்றும் பூவின் இதழ்களை அரைத்து செய்யப்பட்ட கலவை முடி உதிர்வதை தடுப்பதற்கான இயற்றையான பொருளாக உள்ளது.
அது முடியின் நிறத்தை கருமையாக வைத்திருக்கவும், ஷாம்பு போட்ட பின்னர் தலைக்கு போடும் போது பொடுகுகளை நீக்கவும் உதவுகிறது.
தேநீர்
செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட தேநீர் பல்வேறு நாடுகளிலும் அதன் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுநீரகத்தின் பிரச்னைகளின் போது, இயற்கையான முறையில் அதனை சரி செய்ய சர்க்கரை இல்லாமல் இந்த செம்பருத்தி தேநீரை பருக வேண்டும் மற்றும் மன அழுத்தத்துடன் இருக்கும் வேளைகளில் நம்மை சாந்தப்படுத்தவும் இந்த தேநீர் உதவுகிறது.
சரும பாதுகாப்பு
அழகு சாதன பொருட்களில், சரும பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் பொருட்களை செம்பருத்தி கொண்டிருக்கிறது.
சீன மருத்துவத்தில், செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு சூரிய-கதிருக்கு எதிரான புறஊதாக் கதிர்வீச்சினை ஈர்க்கவும் மற்றும் தோலில் ஏற்படும் சுருக்கங்களை அகற்றவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இரத்த அழுத்தத்தை குறைத்தல்
செம்பருத்தி இலை தேநீரை பருகுவது தொடர்பான ஆய்வுகளின் முடிவில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்ப்பட்டிருந்து பல நபர்களின் இரத்த அழுத்த அளவை குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக தொடர்ச்சியாக சாப்பிட வேண்டிய மருந்தாக செம்பருத்தி இலை உள்ளது.
காயங்களை குணப்படுத்துதல்
திறந்த காயங்கள் மற்றும் புற்றுநோயினால் உருவான காயங்களின் மேல் போடுவதற்காக செம்பருத்தியில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணைய் பயன்படுகிறது.
புற்றுநோயின் ஆரம்ப காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. திறந்த காயங்களை வேகமாக குணப்படுத்த செம்பருத்தி சாறு உதவுகிறது.
கொழுப்பை குறைத்தல்
செம்பருத்தி இலை தேநீர் L D L கொழுப்பின் அளவை குறைப்பதில் மிகவும் திறன் வாய்ந்த மருந்தாக உள்ளது. தமனிகளின் உள்ளே உள்ள அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை இவை குறைக்கின்றன.
இருமல் மற்றும் ஜலதோஷம்
செம்பருத்தி இலைகளில் பெருமளவு குவிந்து கிடக்கும் வைட்டமின் சி-யை தேநீராகவும், சாறாகவும் பிழிந்து குடிக்கும் போது அது சாதாரண ஜலதோஷம் மற்றும் இருமலுக்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.
உங்களுடைய ஜலதோஷத்தை வெகு சீக்கிரத்தில் வெளியே அனுப்ப செம்பருத்தி உதவுகிறது.
எடையை குறைத்தல் மற்றும் ஜீரணம்
இயற்கையாகவே பசியை குறைக்கும் குணத்தை கொண்டிருக்கும் செம்பருத்தியை உணவில் சேர்த்துக் கொள்வதால் எடையை குறைக்க முடியும்.
செம்பருத்தி இலை தேநீரை குடிப்பதன் மூலம் நீங்கள் மிகவும் குறைவாக உணவு உண்ணவும் மற்றும் உண்ட உணவை வேகமாக ஜீரணம் செய்ய வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கவும் முடியும்.
மூப்பினை தள்ளிப் போடுதல்
செம்பருத்தி இலைகளில் ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்கள் மிகவும் அதிக அளவில் உள்ளன.
இந்த பொருட்கள் உங்கள் உடலிலுள்ள கிருமிகளை எதிர்த்து நாசம் செய்யும் வல்லமை படைத்தவையாக இருப்பதால், உங்களுக்கு வயதாவது தள்ளி வைக்கப்பட்டு, நீங்கள் நீண்ட இளமையுடன் இருக்க வைக்க உதவுகிறதது

இன்றைய காலத்தில் பெரும்பாலும் அனைவரும் பெரிதும் பாதிக்கப் படுவது சிறுநீரகக் கல் ஆகும். இந்த பிரச்சனைக்கு 20 வயது இளைஞர்கள் கூட ஆனாகி அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அவற்றில் பெரும் காரணமாக இருப்பது உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காதது, உப்புகள் அதிகம் உள்ளஉணவுகளை உண்பது, கால்சியம் சத்துக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பது, சிறுநீர் பாதையில் கிருமி தொற்று ஏற்பட்டு, அந்த கிருமி சிறுநீர் குழாயை அரித்து புண் ஆக்கி, குழிகளை உண்டாக்குவதோடு, அந்த வழியாக சிறுநீரின் மூலம் வெளியேறும் உப்புகள் சரியாக வெளியேறாமல் தங்கிவிடுதல் போன்றவற்றால் ஏற்படும்.
அந்த பிரச்சனையை போக்க ஒரே சிறந்த வழி எலுமிச்சை சாற்றைப் பருகுவது தான். இது ஏதோ ஒரு மூடநம்பிக்கை அல்ல. ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் (Santiago Kidney stone centre)இயக்குநர் ரோஜர் எல்சர் என்பவர் இதனை ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார். அந்த ஆய்வில் எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது என்று கூறுகிறார்.
பொதுவாக பழச்சாறுகளை அதிகமாக பருகினால் உடலில் உப்புகள் சேருவதைத் தடுக்கலாம். அதிலம் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கும் பழங்களை சாப்பிட்டால் நல்லது. அதிலும் அந்த சிட்ரிக் ஆசிட் எலுமிச்சையிலேயே அதிகமாக உள்ளது.
அதிலும் இந்த எலுமிச்சையை சாறு பிழிந்து தண்ணீரில் கலந்து, தினமும் ஒரு வேளை பருக வேண்டும். இதனால் சிறுநீரகத்தில் உருவாகும் கல்லானது ஒன்றிலிருந்து 0.13 விகிதமாகக் குறைகிறது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக கல்லின் வகை மற்றும் அறிகுறிகள்.
கால்சியம் வகை கற்கள் : அந்த கற்கள் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் வெளியேறும் போது கற்கள் நகர்ந்து முதுகு வலி, சிறுநீரில் இரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
யூரிக் ஆசிட் வகை கற்கள் : இந்த பொருள் சிறுநீரில் இருக்கும் பொருள் தான். ஆனால் இது அளவுக்கு அதிகமாக சேரும் போது, அந்த பொருள் முழுவதுமாக வெளியேறாமல், உடலிலேயே தங்கிவிடும். இது அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவருக்கு ஏற்படும். இதனால் வயிற்றில் வலி ஏற்படும்.
மான் கொம்பு கற்கள் : இது மானின் கொம்பு போன்று இருக்கும். மேலும் உடலில் கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.
ஏற்கனவே கற்கள் இருந்து அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால், அதனை சாதாரணமாக விடாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கூறுகிறார். அதே சமயம் எலுமிச்சை சாற்றையும் தொடந்து பருக வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:
Post a Comment