MUTHUPETTAIPEOPLE



counter

MUTHUPETTAI PEOPLE

Friday, 30 September 2022

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2...!!


 கோஸ்டா-2 என்ற புதிய வைரஸ் மீண்டும் மிரட்ட வருகிறது. ஜெனீவா, கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று முன்தினம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ஆனால், கொரோனாவை போன்றே மனிதர்களை அச்சுறுத்தக் கூடிய புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு 'கோஸ்டா-2' என்று பெயரிடப்பட்டு உள்ளது. ரஷ்ய வவ்வால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதனால், புதிய பீதி ஏற்பட்டுள்ளது.

Friday, 28 February 2014

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்காவில் 712வது பெரிய கந்தூரி விழா

ஜாம்புவானோடை தர்காவின் 712வது பெரிய கந்தூரி   விழா வரும் 2ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்குகிறது. முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில்   உள்ள சேக்தாவூது ஆண்டவர்   தர்கா   உலக புகழ் பெற்றதாகும்.தர்காவின் பெரிய கந்தூரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொள்வார்கள்.

Sunday, 16 February 2014

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 10,000க்கு மேல் கொண்டு வந்தால் படிவத்தில் குறிப்பிட வேண்டும்

immigration-formவெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை   கடத்துவது   அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள்    எடுக்கப்பட்டு வருகின்றன.மேலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், என்னென்ன பொருட்கள் கொண்டு வருகிறோம் என்று சுங்கத்துறை படிவத்தில்   குறிப்பிட   வேண்டும்.

Wednesday, 5 February 2014

முத்துப்பேட்டை பகுதியில் ஸ்டாம்ப் தட்டுப்பாட்டால் தபால் அனுப்பும் பணி பாதித்துள்ளது.

20140206a_00510601001திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தபால் நிலையங்களில் ஸ்டாம்புகள் போதிய அளவில் இல்லாததால் பதிவு தபால் அனுப்பும் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சவுதியில் வேலை செய்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து 1.75 கோடி அபகரிப்பு

9061605-vector-illustration-of-a-man-in-jail
சவுதி அரேபியாவில் வேலை செய்த 51 வயது பெண்ணை, 38 வயது வங்கி மேலாளர் 3 வருடத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். தனது 1 கோடியே 75 லட்சத்தை பறித்து கொண்டு பிரிந்து சென்றுவிட்டதாக அந்த பெண் புகார் செய்ததையடுத்து வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம்   வெளி நாட்டில் அல்ல, அண்ணா நகரில்தான்   நடந்துள்ளது.   இதுபற்றிய விவரம் வருமாறு:

Saturday, 1 February 2014

சென்னையில் ஹெச் .ராஜா கொடும்பாவி கொளுத்திய SDPI -கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்பாட்டம் !!

கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினரையும், சமூக தலைவர்களையும் அவதூறாக விமர்சித்து தமிழகத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், பேசிவரும் பாஜகவின் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக இன்று (31-01-2014) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Thursday, 30 January 2014

மானிய விலையில் 12 எரிவாயு சிலிண்டர்கள் : ஆதார் எண் தேவையில்லை!

 மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் வாங்க ஆதார் எண் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது.மேலும், வீட்டு உபயோகத்திற்கென மானிய விலையில்   அரசு வழங்கும்   சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 உயர்த்தவும் அமைச்சரவை   ஒப்புதல் அளித்துள்ளது.  

முத்துப்பேட்டையில் பரபரப்பு. கவுன்சிலர் நாசர் ‘ பிச்சை ‘ எடுத்தார்.

20140131a_01310601101தனது வார்டை புறக்கணிப்பதாக கூறி முத்துப்பேட்டை பேரூராட்சி வாசலில் நேற்று அதிமுக கவுன்சிலர் நாசர் பிச்சை எடுத்தார்.  முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டம் நேற்று அதன் தலைவர் அருணாச்சலம்(அதிமுக) தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி,   துணை தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Tuesday, 28 January 2014

திருச்சி போராட்டத்தை முடித்துவிட்டு அதிராம்பட்டினத்தை நோக்கி வந்து கொண்டிருந்த வேன் விபத்து

திருச்சி போராட்டத்தை முடித்துவிட்டு அதிராம்பட்டினத்தை நோக்கி வந்து கொண்டிருந்த வேண் மோதி கந்தர்வகோட்டையில் ஒருவர் பலி!





Sunday, 26 January 2014

சென்னை ராயபுரத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்: சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வி.ஹெச்.பி!சென்னையில் பதற்றம்


சென்னை ராயபுரம் பகுதியில் முஸ்லிம்கள் மீது வி.ஹெச்.பி அமைப்பினரின் தாக்குதலால் அங்கு பதட்டமான சூழல் நிலவிவருகிறது.
சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேல் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இங்கு வாழும் மக்களுடன் பரஸ்பரம் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

Saturday, 25 January 2014

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற சென்றவர் மாட்டிக்கொண்ட பரிதாபம்

சென்னை: புது ரூபாய் நோட்டுகளை மாற்றும்போதுதான் கடைக்காரர்களின் சந்தேகப் பார்வை நம் மீது பட்டு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்றால்… 2005க்கு முன்பாக அச்சிடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்ற முயன்றவருக்கு ஏற்பட்ட போலீஸ் அனுபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ள நோட்டு புழக்கம், கருப்பு பணப் பதுக்கலை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி அதிரடி திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, 2005ம் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. வரும் மார்ச் 31க்கு பிறகு 2005ம் ஆண்டுக்கு முன்னர் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தது. ஏப்ரல் 1 முதல் மூன்று மாதங்களுக்குள் வங்கிக்கு சென்று இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தது.

Friday, 24 January 2014

முத்துப்பேட்டையிலிருந்து 20 பஸ்கள் 40 வேன்களில் சிறை செல்லும் போராட்டத்திற்கு செல்கிறோம் -தவ்ஹீத் ஜமாத் அன்சாரி பேட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  வரும் 28 ஆம் தேதி சிறை செல்லும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது .இதற்காக தமிழகம் முழுவதும் ஆலோசனை கூட்டங்கள் மற்றும் தர்பியா முகாம்களை  தீவிரமாக நடத்தி வருகிறது .


ரபரபிற்கு சிறிதும் பஞ்சமில்லாத முத்துப்பேட்டையில் ,TNTJ வின் போராட்ட பணிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது .

முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன.