ஜாம்புவானோடை தர்காவின் 712வது பெரிய கந்தூரி விழா வரும் 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்கா உலக புகழ் பெற்றதாகும்.தர்காவின் பெரிய கந்தூரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டின் 712வது பெரிய கந்தூரி விழா வரும் 2ம் தேதி இரவு 9 மணிக்கு கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக மாலை 6 மணிக்கு தர்காவிலிருந்து புனித கொடி பல்லாக்கு ஊர்வலம் துவங்குகிறது. இதைத்தொடர்ந்து தினமும் இரவு இஸ்லாமிய சொற் பொழிவு, இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான புனித சந்தனக்கூடு ஊர்வலம் வரும் 11ம் தேதி இரவு நடைபெறுகிறது. மறுநாள் மாலை அந்தி கூடு ஊர்வலம் நடைபெறுகிறது. 15ம் தேதி புனித கொடி இறக்கப்படுகிறது. இந்த கந்தூரி விழாவில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பதால் மாவட்ட அரசு நிர்வாகம் சார்பில் சாலை, சுகாதாரம், தெருவிளக்கு பனிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
தர்கா வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஊர்வலத்துக்கு தேவையான ரதம், பல்லாக்கு, மினரா தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.


No comments:
Post a Comment