MUTHUPETTAIPEOPLE



counter

MUTHUPETTAI PEOPLE

Wednesday, 5 February 2014

முத்துப்பேட்டை பகுதியில் ஸ்டாம்ப் தட்டுப்பாட்டால் தபால் அனுப்பும் பணி பாதித்துள்ளது.

20140206a_00510601001திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தபால் நிலையங்களில் ஸ்டாம்புகள் போதிய அளவில் இல்லாததால் பதிவு தபால் அனுப்பும் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக முத்துப்பேட்டை நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் தபால்கள் ஸ்டாம்புகள் தட்டுப்பாட்டால் வாடிக்கையாளர்களுக்கு   அனுப்புவதில்   காலதாமதம்   ஏற்பட்டு   முடங்கி உள்ளது.
அருகே   உள்ள   ஜாம்புவானோடை தர்கா கந்தூரி விழா அடுத்த மாதம் 2ம் தேதி துவங்குகிறது. இதற்காக தர்கா சார்பில் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் தபால்கள் அனுப்பப்படுவது   வழக்கம்.   இந்த வருடம் 1.50 லட்சம் தபால்கள் ஸ்டாம்ப் பற்றாக்குறை யால் அனுப்ப முடியாமல் தர்காவிலேயே தேங்கி உள்ளது.
கந்தூரி விழாவிற்கு 2 மாதங்களுக்கு முன்பே இந்த தபால்கள் அனுப்பப்படும். அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று அங்குள்ள தபால் நிலையம் மூலம் அனுப்பலாம் என்றால், அங்கும் ஸ்டாம்ப் பற்றாக்குறை உள்ளது.   இதனால்   பல தனியார் கூரியர் நிறுவனங்களை மக்கள் நாட தொடங்கி உள்ளனர்.
இதுபற்றி   ஜாம்புவானோடை   தர்கா நிர்வாகிகள் கூறுகையில்,   கந்தூரி விழாவையொட்டி வருடந்தோறும்   நாங்கள்   லட்சக்கணக்கில்   தபால்கள் அனுப்பி வருகிறோம். இந்த தர்காவால் ஜாம்புவானோடை   அஞ்சலகத்துக்கு அதிக அளவில் வருமானம் உள்ளது. ஆனால் எங்களுக்கு உரிய ஸ்டாம்புகளை தருவதில் கவனம் செலுத்தாமல் அஞ்சலக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். ஸ்டாம்ப் பிரிண்ட் மெஷினை தபால்துறை இங்கு கொண்டுவந்து பிரிண்ட் செய்து தபால்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறினர்.
இதுகுறித்து ஜாம்புவானோடை அஞ்சலக அதிகாரி கேம்நாத் கூறுகையில், ஸ்டாம்ப் தட்டுப்பாடு தமிழகம் முழுவதும் உள்ளது. ஸ்டாம்ப் பிரிண்ட் செய்யப்படும் இடத்தில் மெஷின் பழுதடைந்துள்ளதால் ஸ்டாம்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தர்காவுக்காக பிரின்டர் மூலம் பதிவு செய்யும் மெஷின் விரைவில் கொண்டுவர உயர் அதிகாரிகளிடம் தெரிவத்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment