முத்துப்பேட்டை, அக்டோபர் 26: முத்துப்பேட்டை பகுதியில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. மேலும் டெங்கு காய்ச்லால் பாதிக்கப்பட்டவர்கள் முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் போன்ற மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளர்;. இதனால் பொதுமக்கள் சார்பில் அதிர்ச்சியும் அச்சமும் ஏற்பட்டது. இந்த நிலையில் முத்துப்பேட்டை தனியார் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஹாஜி என்பவரது மகள் சஜிரா(7) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முத்துப்பேட்டை தனியார் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். இந்த செய்தியை அறிந்த பொதுமக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு காரணம் நகரில் ஏற்பட்டுள்ள அசுத்தங்கள்தான் என்று அறிந்த சுகாதாரத்துறை முத்துப்பேட்டை பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு அதிரடியாக ஒட்டுமொத்த சுகாதார பணியை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதன்படி நேற்று முதற்கட்டமாக 13-வது வார்டு பகுதியில் மாவட்ட சுகாதாரத் துறை பூச்சியியல் அலுவலர் பழனிச்சாமி தலைமையில் பேரூராட்சி கவுன்சிலர் நாசர் வட்டார சுகாதாரத்துறை அதிகாரி பாஸ்கரன் முத்துப்பேட்டை சுகாதாரத்துறை ஆய்வாளர் பழனியப்பன் பேரூராட்சி சுகாதார அலுவலர் வீரமணி சமூக ஆர்வளர் நிஜாமுதீன் ஆகியோரது முன்னிலையில் வீடுவீடாகச் சென்று தேவையற்ற பொருட்கள் மற்றும் அசுத்தங்களை கைப்பற்றிச் சென்றனர்.

No comments:
Post a Comment