MUTHUPETTAIPEOPLE



counter

MUTHUPETTAI PEOPLE

Thursday, 31 October 2013

முத்துப்பேட்டையில் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்.

1394259_1440915619468667_2139031983_nமுத்துப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து அதை கண்டிக்கும் முகமாக நேற்று  நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்திற்கு 1 வது வார்டு கவுன்சிலர் கொசு வலை போர்த்தி வந்தார்.   அதை படமெடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை பேரூராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம் தாக்கி உள்ளார். தாக்குதலில் காயமடைந்த தினகரன் நிருபர் முகைதீன் பிச்சை,   புதிய தலைமுறை நிருபர் திருமுருகன்,    தினமலர் நிருபர் பிச்சு மணி,    ஆகியோர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திய அதிமுகவை சேர்ந்த பேருராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிக்கையாளர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.  சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பத்திரிக்கையாளர்களை சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதன் அடிப்படையில் பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணாச்சலம் மீது வழக்கு பதியபட்டுள்ளது.
1452074_738140742868562_1475526648_n
1394259_1440915619468667_2139031983_n

No comments:

Post a Comment