
அக்டோபர்30:
இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் திரைப்படம் எடுத்த ‘அர்னாட் வேன் டூன்’ இவ்வருடம் மக்கா சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார்.
நெதர்லாந்தைச் சேர்ந்த அரசியல்வாதியான வேன் டூன் கடந்த 2008 ஆம் ஆண்டு உலக முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் தயாரித்த ‘ஃபித்னா’ என்ற திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இஸ்லாத்தையும் குர்ஆனையும் நன்கு படித்து இஸ்லாம் குறித்து நன்கு புரிந்துகொண்டு மனம் திருந்தி இவ்வருட தொடக்கத்தில் வேன் டூன் ,இஸ்லாத்தைத் தழுவினார். பின்பு மக்கா சென்று உம்ராவை நிறைவேற்றிய வேன் டூன் இவ்வருடம் லட்சக்கணக்கான ஹஜ் யாத்ரீகர்களுடன் ஹஜ்ஜையும் நிறைவேற்றியுள்ளார்.
கடந்த காலங்களில் அவர் செய்த தவறுகளுக்கு மக்காவில் கண்ணீர் விட்டு அழுது பாவமன்னிப்பு கோரியதாக நாளிதழ் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் வேன் டூன் கூறியுள்ளார்.
விரைவில் இஸ்லாத்தின் நற்பண்புகள் குறித்து திரைப்படம் எடுத்து முஸ்லிம்கள் மீதான தவறான கருத்துக்களை களைவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment