சென்னையில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மாநாடு -மமக பொதுசெயலாளர் பங்கேற்பு!!
என் தாய்நாடு 67 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. வற்றாத ஜீவா நதிகள், அழகான மலை தொடர்கள், எழில்மிகு கடற்கரைகள், கொஞ்சும் வயல்வெளிகள், பசும் காடுகள், பள்ளத்தாக்குகள் என இயற்கையின் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய தேசம் இது

.பல்வேறு மொழிகள், மதங்கள் இனங்கள் பல்வேறு தோற்றங்களை உடைய மனிதர்கள் என வேற்றுமையில் ஒற்றுமையை பின்பற்றி நடக்கும் தேசம் இது! இங்கே நரேந்திர மோடி, பிரவின் தொகாடியா, போன்ற மதவெறியர்களும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அது சார்ந்த பயங்கரவாத அமைப்புகளும் என் தேசத்தின் கரும்புள்ளிகள். ஆனால் அவர்கள் மிகவும் சிறுபான்மையினர். ஆறுதல் அளிக்கும் வகையில் எமது பெரும்பான்மை இந்து சொந்தங்கள் மனிதநேயத்தை மதிப்பவர்கள். நாங்கள் எல்லோரும் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதில் பூரிப்படைகிறோம்.
நான் ஒரு இந்திய முஸ்லிம் என்பதில் பெருமைப்படுகிறேன். துரதிர்ஷ்டவசமாக மோடி போன்றவர்கள் பிரதமராக வந்தாலும், அவரை போன்றவர்களை ஜனநாயக வழியில் எதிர்த்து போராடும் உரிமையும், துணிச்சலும் எனக்கு உண்டு. என் கருத்துக்கு ஆதரவாக திரண்டு எழ, பெரும்பான்மை இந்திய மக்கள் தயாராக உள்ளனர். காரணம் சமய நல்லிணக்கமும், மனிதநேயமும் பெரும்பான்மை இந்தியர்களின் உணர்வுகளாகும்.
பல அரபு நாடுகளில் கோலைகளாக வாழும் அரபு மன்னர்களை எதிர்த்து அங்குள்ள குடிமக்களால் ஒரு கேள்வி கூட கேட்க முடியவில்லை. ஆனால் என் தாய் நாட்டில் நான் யாரை எதிர்த்தும் கேள்வி கேட்க முடியும். பல முஸ்லிம் நாடுகளில் பள்ளிவாசல்களில் சுதந்திரமாக வெள்ளிக்கிழமைகளில் சொற்பொழிவாற்ற முடியவில்லை. ஆனால் எனது நாட்டில் அதற்கு முழு சுதந்திரம் உண்டு. வழிபாட்டு தளங்களின் அருகில் ஒரு மதுக்கடையோ, விபசார விடுதியோ இருந்தால் அதை மக்கள் சக்தியோடு அப்புறப்படுத்த முடியும். இந்த நிலை மற்ற நாடுகளில் இல்லை. என்னால் இங்கு எந்த சர்வாதிகாரத்தையும், ஏகாதிபத்தியத்தையும், அரச வன்முறைகளையும் எதிர்த்து போராட முடியும்.
என்னோடு கரம் கோர்க்க சமூக நீதி போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மனசாட்சி உள்ள அரசியல்வாதிகள், நேர்மையான அதிகாரிகள், பண்பு மிக்க பொதுமக்கள் என பலரும் உண்டு.
அதனால்தான் சொல்கிறேன். நான் ஒரு இந்திய முஸ்லிம் என்பதில் பெருமைப்படுகிறேன்.
இந்த தருணத்தில் நாட்டு விடுதலைக்காக போராடிய குஞ்சாலி குட்டி, மருதநாயகம், பூலித்தேவன், ஹைதர் அலி, திப்பு சுல்தான், கட்டபொம்மன். சின்ன மருது - பெரிய மருது, தீரன் சின்னமலை, சிராஜித் தௌலா, இரண்டாம் பகதூர்ஷா, ஜான்சி ராணி லட்சுமிபாய், ஹஜரத் பேகம், பகத் சிங், அபுல் கலாம் ஆசாத், நேரு, நேதாஜி, காந்திஜி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தியாகிகளை நினைவில் ஏந்துவோம்.
ஊழல், மத பயங்கரவாதம், சாதி பயங்கரவாதம், வன்முறை போன்றவற்றை எதிர்காலத்தில் ஒழிக்க சபதம் ஏற்போம்.
நமது நாட்டில் ஏத்தனையோ குளறுபடிகள் இருந்தாலும் இது ஒரு சிறப்பான தேசம் என்பதில் ஐய்யமில்லை. எனவே போலி தேச பக்த வெறியை தூண்டும் திருடர்களை இனம் கண்டு நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்கி தேசத்தை வழிநடத்த தயாராவோம்.
இந்தியா எங்கள் தாய்நாடு! இஸ்லாம் எங்கள் வழிபாடு!

No comments:
Post a Comment