MUTHUPETTAIPEOPLE



counter

MUTHUPETTAI PEOPLE

Sunday, 3 November 2013

முத்துப்பேட்டை அருகே சென்னை செல்லும் பேருந்து விபத்து ஒருவர் படுகாயம்!


நவம்பர் 02 ஆம் தேதி  அதிராம்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் முத்துப்பேட்டையை அடுத்த கீழக்காடு பாமணி ஆற்று பாலம் அருகே வந்தபோது, எதிரே முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சென்ற லாரி, தனியார் ஆம்னி பஸ் மீது மோதியது. இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமதுஅலி மகன் ஆஜித்கான்(வயது37) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment