சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மையம் கொண்டுள்ள புயல் நாளை மாலை கரையை கடக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாகை மாவட்டப்பகுதியில் கரையை கடக்க இருப்பதால் கடலோர மாவட்டங்களில் புயல்எச்சரிக்கை கூண்டு ஒன்றாம் எண் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர். தற்போதை நிலையில் சென்னைக்கு அருகே சுமார் 550கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனையடுத்து வடதமிழகம்மற்றும் புதுச்சேரி பகுதியில் இன்று இரவு கனமழைக்குவாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment