கடலூர்- நாகப்பட்டனம் இடையே நாகை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. நாகை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அவ்வப்போது சூறாவளிக் காற்று வீசியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழை காரணமாக ஒருவர் உயிரிழந்தார். கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு எதுவும் இல்லை.பிற்பகல் 3 மணிக்கு பிறகு வானம் தெளிவாக காணப்பட்டது.முன்னதாக வங்க கடலில் தாழ்வு நிலை காரணமாக நாகையில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வெள்ளிகிழமை இரவு முதல் நாகையின் அனைத்து பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.மாவட்டத்தில் அதிக அளவாக மயிலாடுதுறை வருவாய் கோட்ட பகுதிகளில் சனிகிழமை பகல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.


No comments:
Post a Comment