MUTHUPETTAIPEOPLE



counter

MUTHUPETTAI PEOPLE

Saturday, 21 December 2013

முத்துப்பேட்டையில் வங்கி ஊழியர் மீது தாக்குதல்

டிசம்பர் 21: முத்துப்பேட்டையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி உள்ளது. இங்கு அலுவலக உதவியாளராக மணிகண்டன் (வயது 38) வேலை பார்த்து வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி. சம்பவத்தன்று இவர் வங்கி முன் நின்று கொண்டிருந்தார்.



அப்போது பக்கத்தில் உள்ள ஏ.டி.எம்.மிற்கு ஒருவர் வந்தார். அப்போது ஏ.டி.எம். வேலை செய்யவில்லை. அவர் இதுபற்றி மணிகண்டனிடம் கேட்டார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. 

அத்திரம் அடைந்த அவர் மணிகண்டனை செருப்பால் அடித்து கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment