வீடுகளுக்கான மானியம் அல்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.220 உயர்த்தப்பட்டுள்ளது.வீடுகளுக்கு மானியத்துடன் தரப்பட்டு வரும் 9 சிலிண்டர்கள் விலையில் மாற்றமில்லை. 9 சிலிண்டருக்கு மேலாக வாங்கும் சிலிண்டர் விலை
ரூ.1234ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. வணிகத்துக்காக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.350 உயர்ந்துள்ளது.
தற்போது ரூ.1880 ஆக உள்ள வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை தற்போது ரூ.2265 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய 9 சிலிண்டர்களை டிசம்பர் வரை பெரும்பாலான நுகர்வோர்கள் பெற்றுவிட்டனர். இனி மானியமில்லாத சிலிண்டர்களைத்தான் 3 மாதங்களுக்கு வாங்கி உபயோகிக்க வேண்டியிருக்கும். இந்த நிலையில் மானியமில்லாத சிலிண்டரின் விலை 220 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment