MUTHUPETTAIPEOPLE



counter

MUTHUPETTAI PEOPLE

Tuesday, 21 January 2014

திருச்சியில் நடமாடும் நூதன திருடர்கள். போலீஸ் போல் நடித்து கைவரிசை

07bg_bgvjh_arre_08_1356870eதிருச்சியில் அடுத்தடுத்து ஒரு மணி நேரத்திற்குள் போலீஸ் எனக்கூறி 2 மூதாட்டிகளிடம் 15 பவுன் நகைகளை அபேஸ் செய்த �வெள்ளைத் தொப்பி� இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி   மெயின்கார்டுகேட்   மதுரை   ரோட்டில்   உள்ள   ராஜாகாம்ப்ளக்ஸ்   என்ற   பகுதியில் நேற்று காலை 9. 15மணி அளவில் துப்புரவு பணியாளர் அஞ்சலை(60) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வெள்ளை தொப்பி அணிந்தபடி வேகமாக வந்த டிப்டாப் ஆசாமிகள் 2 பேர் அஞ்சலையை பார்த்து, ‘ காலம் கெட்டு கிடக்கிறது.
நகை களை போட்டுக் கொண்டு வேலை பார்க்காதீர்கள். இப்போதுதான் அருகில் செயின்பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. எனவே நகைகளை ஒரு பேப்பரில் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினர்.   இதையடுத்து அஞ்சலை தான் அணிந்திருந்த செயின் மற்றும் வளையல்களை கழற்றினார். அதை அந்த ஆசாமிகள் வாங்கி பேப்பரில் மடித்துக் கொடுத்தனர்.
சிறிது நேரம் கழித்து பேப்பரை அஞ்சலை பிரித்து பார்த்தபோது அதில் கவரிங் செயின் ஒன்றும் சில கற்கள் மட்டுமே இருந்தன. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த அஞ்சலை கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
மற்றொரு சம்பவம்; திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பாப்பாகாலனியை சேர்ந்தவர் மஸ்தான்கனி. இவரது மனைவி ஜமீலா(60). இவர் நேற்று காலை 10.15 மணியளவில் அப்பகுதியில் உள்ள ரேசன் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஜமீலாவை மறித்து தங்களை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
அப்போது சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த உண்மையான போலீஸ்காரர்களை காண்பித்து இந்தப் பகுதியில் தற்போதுதான் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் நீங்கள் இவ்வளவு நகைகளை போட்டுக்கொண்டு சென்றால், அங்கே நிற்கும் அதிகாரிகள் எங்களை திட்டுவார் கள்.   எனவே பேப்பரில் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினர்.
இதனால் ஜமீலா நகைகளை கழற்றினார். அதை வாங்கிய அவர்கள் பேப்பரில் சுற்றி கொடுத்தனர். ஜமீலா வீட்டுக்கு வந்து பேப்பரை பிரித்து பார்த்த போது அதில் 2 கவரிங் வளையல்கள், கற்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து எடமலைபட்டிபுதூர் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த 2 சம்பவங்களால் திருச்சியில் பெண்கள் நகைகள் அணிந்து வெளியே செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் போலீசார் போல் உதவி செய்ய வரும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
2 சம்பவங்களிலும் ஒரு ஆசாமி மூதாட்டியிடம் பேச்சுக் கொடுக்க மற்றொரு நபர் நகைகளை பேப்பரில் மடிப்பது போல் நடித்து, ஏற்கனவே பாக்கெட்டில் வைத்திருந்த பேப்பர் பாக்கெட்டை கொடுத்ததும், இருவரும் வெள்ளை தொப்பி அணிந்திருந்ததும் தெரியவந்துள்ளது.
தினகரன் செய்தி.

No comments:

Post a Comment