ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியைக் கண்டு பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஷகீல் அகமது விமர்சித்துள்ளார்.ஆம் ஆத்மி கட்சியைக் குறிப்பிடும் வகையில்
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் பாஜகவின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்புகிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஷகீல் அகமது, டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட பதிவில் ”காங்கிரஸ் கட்சியை மோடி விமர்சிப்பதில்அர்த்தம் உள்ளது.
ஆனால் இத்தனை நாள் கழித்து ஆம் ஆத்மி கட்சியை அவர் விமர்சித்துள்ளார். அந்தக் கட்சியின் வளர்ச்சியைக் காண்டு மோடி பயப்படுகிறார் என்பதையே இது காண்பிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனுக்கு எதிராக மோடி தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சியின்பொதுச் செயலர் திக்விஜய் சிங், “இது போன்ற மோசமான கருத்துகளை பாஜக பிரதமர் வேட்பாளரால் மட்டுமே தெரிவிக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment