எனது பெயர் ஜனாஸா ! நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர். என்னுடைய நெருங்கிய நண்பர்களும் என்னைச் சூழ்ந்து நின்றுகொண்டு என் முகத்தையே பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
திடிரென்று எனது மூச்சு பெரிதாக இழுத்தது. பெரும் மூச்சாக இழுத்து இழுத்து விட்டேன். எனது நிலைமை மோசமாவதைக் கண்ட சிலர் யாசீன் சூராவை ஓத ஆரம்பித்தனர். மூச்சு இப்பொழுது கொஞ்சம் இலேசானது. எனது கண்களைத் திறக்கிறேன். ஏதோ ஒன்றை எனது கண்கள் காண்கின்றன.
ஆம் ! வந்துவிட்டார். மரணத்தின் வானவரான மலக்குல் மவ்த் வந்துவிட்டார். நிரந்த்தரப்பயனத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன். எனது வாய் திறந்தது. என்சகோதரன் சில துளிகள் தண்ணீரை எனது வாயில் ஊற்றுகிறான். அது அநேகமாக ” ஜம் ஜம் ” தண்ணீராக இருக்கும். மரணத் தருவாயில் எனது வாயில் ஊற்ற வேண்டும் என்பதற்காக நான் அதனைப் பாதுகாத்து வைத்திருந்தேன் .
அனைவரும் ”லா இலாஹஇல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று மொழிய ஆரம்பித்தனர். எனது பார்வை பறி போய் விட்டது. எனது நாடி நரம்புகளெல்லாம் அடங்கிப்போய் விட்டன. எனது உணர்வுகளும் மங்கி மரத்துப் போய் விட்டன.
ஆனால் என்னால் இப்பொழுது கேட்க மட்டும் முடிகிறது. என் அன்புக்குரியவர்கள் அழும் சப்தம் கேட்கிறது. நான் இன்னும் இறக்கவில்லை. ஆனால் உயிரற்று ஜடமாக ஆகி விட்டேன். எனக்குள்ள நேரம் வந்தது . ஒரு நிமிடம் முந்தவும் இல்லை , பிந்தவும் இல்லை.
காத்திருந்த மலக்குல் மவ்த் அவரது கடமையைச் செய்ய ஆரம்பித்தார். விசுக் என்று என் உயிரைப் பிடுங்கினார். என் உடல் சட்டேன்று குலுங்கி அடங்கியது. அவ்வளவுதான். எல்லாம் முடிந்து விட்டது. நான் இவ்வுலகை விட்டுப் பிரிந்துவிட்டேன். என்னை வழியனுப்பி வைப்பதற்குள்ள ஏற்பாடுகள் ஆரம்பம்பாயின.
நான் மாடாய் உழைத்து சேர்த்த சொத்துகள், வங்கித் தொகைகள் , அனுபவித்த விலை உயர்ந்த கார்கள், வாழ்நாள் முழுதும் சேகரித்த எனது தொடர்புகள் அனைத்தும் இனி எனக்கு எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை. இனி எனது அடையாளம் என் கப்ருமட்டும்தான் .
ஒ … எனது பெயரும் மாற்றப்பட்டுவிட்டது. என் பெற்றோர் பலநாட்கள் ஆலோசனை செய்து தேர்ந்தெடுத்த எனது பெயர், அவர்கள் வாயால் கூவி கூவி அழைத்து மகிழ்ந்து அந்தப் பெயர்
மாற்றப்பட்டு விட்டது . இப்பொழுது எனது பெயர் ஜனாஸா ! அதாவது, இறந்த உடல் !
மாற்றப்பட்டு விட்டது . இப்பொழுது எனது பெயர் ஜனாஸா ! அதாவது, இறந்த உடல் !
எனக்கு நெருங்கியவர்கள் எனது கப்ரை வெட்டுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்கள் .
ஜனாஸாவை நீண்ட நேரம் வீட்டுக்குள் வைக்ககூடாதாம். அவர்களுக்குள் பேசிக்கொள்கின்றனர் .
வீடு என்னை இப்பொழுது நீண்ட நேரம் வைத்துகொள்ள அனுமதி இல்லாத இந்த வீட்டை நான்தான் கட்டினேன். பலகனவுகளுடன் பார்த்துப் பார்த்து இலட்சகணக்கில் செலவு செய்து கட்டினேன் .
ஜனாஸாவை நீண்ட நேரம் வீட்டுக்குள் வைக்ககூடாதாம். அவர்களுக்குள் பேசிக்கொள்கின்றனர் .
வீடு என்னை இப்பொழுது நீண்ட நேரம் வைத்துகொள்ள அனுமதி இல்லாத இந்த வீட்டை நான்தான் கட்டினேன். பலகனவுகளுடன் பார்த்துப் பார்த்து இலட்சகணக்கில் செலவு செய்து கட்டினேன் .
என்னைக் குளிப்பாட்ட வேலை நடக்கிறது. நான்வீட்டுக்கு வெளியே குளிப்பாட்டுவதற்க்காக எடுத்துச் செல்லபடுகிறேன். நான் பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில், நான் அழகுற கட்டிய குளியறையில் எனக்கு குளிக்க அனுமதி இல்லை. குளியறையை சொகுசாகப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி அங்கே பொருத்தினேன். அவையெல்லாம் இனி எனக்கு சொந்தமில்லை. இந்த நிலையில் எனக்குப் பயன்பாடாத பொருட்களை நான் ஏன் வாங்கினேன் ?
குளிப்பாட்டி முடிந்தது. என்னை வெள்ளைத்துணியில் சுற்றினார்கள். விலை உயர்ந்த என் ஆடைகள் எல்லாம் எங்கே போய்விட்டன ? என்னை சந்தூக்கில் வைத்தார்கள். எனது விலை உயர்ந்த ஏசி கார் ஒரு பக்கம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அது இப்பொழுது எனக்கு இல்லை. எனக்குக் கிடைத்திருப்பது எல்லாம் இந்த மரப் பெட்டிதான் !
இதற்க்காகத்தான நான் இவ்வளவு நாள் கஷ்ட்டப்பட்டு பணம் சம்பாதித்தேனா? இப்பொழுது எந்தப் பயனும் தராத இந்தப் பணத்தை சம்பாதிப்பதற்க்குதான் நான் எத்தனை பொய்கள் சொன்னேன் எல்லாம் வீணாகப் போய் விட்டது. நான் என் வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன். எனது இறுதிப் பயணத்தை சுத்தமாக மறந்து வாழ்ந்தேன். ஆனால் அது உறுதியானது, மிக நெருங்கியது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் அதனை மறந்து உலகமாயையில் முழ்கிப் போனேன். ஆனால் இன்றோ … எனது விளையாட்டு எல்லாம் முடிந்து விட்டது. இது எனக்கு மட்டும் அல்ல, உங்கள் எல்லோருக்கும் தான். நீங்கள் எல்லோரும் இதே நிலையை ஒரு நாள் அடையத்தான் போகிறீர்கள் .
ஒரு நாள் உங்களுக்கு இந்த உலகம் ஒரு சிறிய கனவு போல் களைந்து விடும். எனக்கு நேர்ந்தது போல் உங்களுக்கும் நடக்கும். உங்கள் உயிர்களும் ஒரு நாள் பிடுங்கப்படும். ஆதலால் தயாராக இருந்து கொள்ளுங்கள் .நன்மைகளைக் கட்டி வைத்து கொள்ளுங்கள். அது ஒன்றுதான் உங்களுக்கு உதவும். உங்கள் இறுதிப் பயணத்தை இன்பமயமாக மாற்றும். மறுமை வாழ்வை மகிழ்ச்சிகரமாக மாற்றும். மரணத்தை மறவாதீர்கள். அது நிச்சயமாக வந்தே தீரும். அது உங்களை இதோ நெருங்கி விட்டது .
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆகவேண்டும். அன்றியும் இறுதித் தீர்ப்புநாளில் தான், உங்க (ள் செய்கைக் ) ளுக்குரிய பிரதிபலன்கள் முழுமையாக கொடுக்கப்படும். எனவே எவர் (நரக)
நெருப்பிலிருந்து பாதுக்காக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர்
நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார் .
நெருப்பிலிருந்து பாதுக்காக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர்
நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார் .
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அந்த வெற்றியாளர்கள் கூட்டத்தில் சேர்த்துவைப்பானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
(இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தைஅளிக்கவல்ல (அற்ப இன்பப் )பொருளேயன்றி வேறில்லை.)

No comments:
Post a Comment