
ஆஸ்திரேலியாவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் ஒரு வாரகாலமாக வெயில் சுட்டெரிக்கிறது. இதுவரையில் இல்லாத வகையில் அங்கு அனல் காற்று வீசுகிறது.
இந்நிலையில் நேற்று உச்சகட்ட அளவாக மெல்போர்னில் 111 டிகிரி பாரன்ஹீட்(44 டிகிரி செல்சியஸ்) வெயில் கொளுத்தியது. தற்போது அங்கு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த அனல் காற்று காரணமாக விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் அடிலாய்டு நகரில் நேற்றைய வெயிலின் அளவு 46 டிகிரி செல்சியஸ் (சுமார் 114 டிகிரி பாரன்ஹீட்) எட்டியதாக வானிலை ஆய்வு மையம் கூறியது. இதுவே நேற்று உலகில் அதிக வெப்ப நகராக விளங்கியது.

No comments:
Post a Comment