MUTHUPETTAIPEOPLE



counter

MUTHUPETTAI PEOPLE

Thursday, 16 January 2014

எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி முயற்சி வெற்றி…!அபுதாபி – சென்னை நேரடி விமான சேவை தொடக்கம்…

அபுதாபி சென்னை நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நிறுத்திய பின்பு சென்னை பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 19/09/2013 அன்று அமீரக காயிதெமில்லத் பேரவையின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அபுதாபி வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்களிடம்    மீண்டும்    அபுதாபி – சென்னை நேரடி விமான    சேவையை ஏற்படுத்த முயற்சி கொள்ள வேண்டி     அபுதாபி தமிழ்ச் சங்கம்,  அய்மான் சங்கம் ஆகிய அமைப்புக்களின் வேண்டுகோள் அடங்கிய கடிதத்துடன் அமீரக காயிதெமில்லத்   பேரவையும்   வலியுறுத்தி ஒரு மனுவை அளித்தது.
அதை பெற்றுக் கொண்ட M.அப்துல் ரஹ்மான் எம்.பி தொடர்ந்து இந்த விஷயத்தில் தன்னுடன் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவ்வப்போது அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நமது கோரிக்கையை அதற்குரிய அதிகாரிகளுக்கு அனுப்பி தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததன் மூலமாக ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் இந்த சேவையை வழங்க முன்வந்துள்ளது.
அதன் அடிப்படையில் 16/01/2014 புதன் கிழமை முதல் தினதோறும் காலை 10:15 மணிக்கு அபுதாபியில் இருந்து சென்னை நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் பயணமாகும்.

No comments:

Post a Comment