அமெரிக்காவின் பாதுகாப்பு ஏஜன்சியான என்.எஸ்.ஏ, இந்தியாஉள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டகம்ப்யூட்டர்களின் தகவல்களை திருடியுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.கம்ப்யூட்டர்களில் தனியாக சர்க்யூட்டுகளை பொருத்திஅமெரிக்கா ரகசிய தகவல்களை திருடியுள்ளது.ரேடியோ வேவ் தொழில்நுட்பத்தின்உதவியுடன் இயங்கும் இத்தகைய சர்க்யூட்டுகள் மூலம் இண்டர்நெட்டுடன்தொடர்பில்லாத கம்ப்யூட்டர்களை அமெரிக்கா ஹேக் செய்துள்ளது.நியூயார்க்டைம்ஸ் பத்திரிகை என்.எஸ்.ஏவின் பிரம்மாண்டமான திருட்டுவேலையைஅம்பலப்படுத்தியுள்ளது.சீனா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, சவூதி அரேபியா, பாகிஸ்தான்உள்ளிட்ட நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களில் இருந்து என்.எஸ்.ஏ தகவல்களைதிருடியுள்ளது.

No comments:
Post a Comment