MUTHUPETTAIPEOPLE



counter

MUTHUPETTAI PEOPLE

Wednesday, 18 December 2013

லிட்டில் இந்தியா கலவரம்: 52 இந்தியர்களை நாடு கடத்தும் சிங்கப்பூர் போலீசார்!

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த 8-ந் தேதி அன்று நடந்த கலவரம் தொடர்பாக 52 இந்தியர்களை நாடு கடத்தப்போவதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாகன விபத்தில் தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியானார். இதைத் தொடர்ந்து அங்கு பெரிய அளவில் கலவரம் மூண்டது. சுமார் 40 வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போலீசார் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கலவரப் பகுதியில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் கொள்கை விதிகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்தது.
கலவரத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 53 பேரை நாடுகடத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதில் 52 பேர் இந்தியர்கள் ஆவர். ஒருவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர். விரைவில் அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பிச்செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் சிங்கப்பூர் போலீசார் தெரிவித்தனர்.
28 இந்தியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும் விசாரணை நடத்தப்படும் 200 இந்தியர்கள், எச்சரிக்கை விடப்பட்டு சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment